புது வருட நல்வாழ்த்துக்கள்
இருட்டு அறையின் மேல் சப்தமின்றி சுழலும் மின்சுற்றி கால் இடையில் நழுவும் காலம் புது வருட நல்வாழ்த்துக்கள் தேகம் சுடா விடிகாலை சூரியன் பறவைகளின் குழப்ப ஆலாபனை எதிர்காலத்தை வளமாக்க நம்பிக்கையோடு பால் வாங்க காத்திருக்கும் மக்கள் வெறிச்சென்ற சாலைகள் சோம்பல் முறிக்கும் தெரு நாய்கள் கொரோனாவை ஒழிக்கும் நோக்கோடு முக மூடியுடன் என் ஆர் ஐ அப்பாக்கள் யுத்தம், நோய் , அரசியல், உலக நடப்பு சலனப்படாமல் பிசா ஹட்ஐ சுத்தம் செயும் அழகான தமிழ் பேசும் பிஹாரி வேலைக்காரன் இருபது ஐந்து வருடங்களாக விடிகாலை பள்ளியெழுச்சியாக - டிவி யில் இறுகிய பொன்னிற ஆடைகளுடன் மோட்டார் பைக் கமலஹசன் பல் முனை வித்தககர்களுடன் அர்த்தமே இல்லைல்லமல் - சப்தமே குறியாக புத்தாண்டு என் இன்று என்று தொலை காட்சி பட்டிமண்டங்கள் ஆயிரம் சலசலப்புகள் இருந்தாலும் நூற்றுக்கணக்கான கவலைகள் இருந்தாலும் போக போக சரியாகிவிடும் என்று நம்பிக்கையோடு நூறு கோடி மக்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக