காலை முதல் இரவு வரை ஸ்லைடு அடித்து, படம் காட்டி ஸ்பிரேட்ஷீட் போட்டு கூட்டி ட்ரெல்லோவில் மாரடித்தோம்! நன்றாக கேட்டார்கள் எல்லாம் தெரியம் என்றார்கள் சரியா என்று கேட்டதற்கு ஸ்ஊமில் திரை பின்னே தலையாட்டினார்கள்!! இரவு எட்டுமணிக்கு அவசரம் அவசரமாய் சமைத்து தொலைக்காட்சிஇல்லாமல் பிள்ளைகளை சாப்பிடவைத்தேன். எல்லாம் சுகமாகும் என நினைத்து மீட்டிங்கில் நுழைத்தால் - அட அட வேலை செய்ய ஆரம்பித்தால் முடியாத இரவு கண் முன்னே விரிந்தது.. தப்பு செய்துவிட்டு தந்தையை பார்க்கும் சிறு பிள்ளை போல் இரவு முதல் காலை வரை மாறடித்தை மீண்டும் அடிப்போம். இது இன்பமா, துன்பமா இல்லை இயல்பான செயல்தரமா எந்த திக்கில் இருக்கிறாய் கடவுளே! சீக்கிரம் சொல்!! காலில் விழுகிறேன்!!!
இடுகைகள்
பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது