இடுகைகள்

புது வருட நல்வாழ்த்துக்கள்

 இருட்டு அறையின் மேல்  சப்தமின்றி சுழலும் மின்சுற்றி  கால் இடையில் நழுவும் காலம்  புது வருட நல்வாழ்த்துக்கள்  தேகம் சுடா விடிகாலை சூரியன் பறவைகளின் குழப்ப ஆலாபனை  எதிர்காலத்தை வளமாக்க நம்பிக்கையோடு  பால் வாங்க காத்திருக்கும் மக்கள்  வெறிச்சென்ற சாலைகள்  சோம்பல் முறிக்கும் தெரு நாய்கள்  கொரோனாவை ஒழிக்கும் நோக்கோடு முக  மூடியுடன் என் ஆர் ஐ  அப்பாக்கள்  யுத்தம், நோய் , அரசியல், உலக நடப்பு  சலனப்படாமல் பிசா ஹட்ஐ சுத்தம் செயும்  அழகான தமிழ் பேசும்  பிஹாரி வேலைக்காரன்  இருபது ஐந்து வருடங்களாக  விடிகாலை பள்ளியெழுச்சியாக - டிவி யில்  இறுகிய பொன்னிற ஆடைகளுடன்  மோட்டார் பைக் கமலஹசன்  பல் முனை வித்தககர்களுடன்  அர்த்தமே இல்லைல்லமல் - சப்தமே  குறியாக  புத்தாண்டு என் இன்று என்று  தொலை காட்சி பட்டிமண்டங்கள்  ஆயிரம் சலசலப்புகள் இருந்தாலும்  நூற்றுக்கணக்கான கவலைகள் இருந்தாலும்  போக போக சரியாகிவிடும் என்று  நம்பிக்கையோடு நூறு கோடி மக்கள் 
 காலை முதல் இரவு வரை  ஸ்லைடு அடித்து, படம் காட்டி  ஸ்பிரேட்ஷீட் போட்டு கூட்டி  ட்ரெல்லோவில் மாரடித்தோம்!  நன்றாக கேட்டார்கள்  எல்லாம் தெரியம் என்றார்கள்  சரியா  என்று கேட்டதற்கு  ஸ்ஊமில் திரை பின்னே தலையாட்டினார்கள்!!  இரவு எட்டுமணிக்கு  அவசரம் அவசரமாய் சமைத்து  தொலைக்காட்சிஇல்லாமல்  பிள்ளைகளை சாப்பிடவைத்தேன்.  எல்லாம் சுகமாகும் என நினைத்து  மீட்டிங்கில் நுழைத்தால் - அட அட  வேலை செய்ய ஆரம்பித்தால்  முடியாத இரவு கண் முன்னே விரிந்தது..  தப்பு செய்துவிட்டு தந்தையை  பார்க்கும் சிறு பிள்ளை போல்  இரவு முதல் காலை வரை  மாறடித்தை மீண்டும் அடிப்போம்.  இது இன்பமா, துன்பமா  இல்லை இயல்பான செயல்தரமா  எந்த திக்கில் இருக்கிறாய் கடவுளே! சீக்கிரம் சொல்!! காலில் விழுகிறேன்!!!

விடுமுறை

omaha வில் விடுமுறை.

அப்பா

என் பிள்ளைகள் என் மகன் என்று எண்ணி எண்ணி நாள் கடத்த என் மனைவியோ கவலை இன்றி மருத்துவமனையில்.

நம்பிக்கை நட்சத்திரங்கள்

பள்ளிகூட நாட்கள்

நான் மதுரை வாசி பிறந்தது திருவள்ளூரில், பின்பு நாம் மதுரைக்கு வந்தேன். kindergarten முடித்த பின்பு நான் என்னுடைய பாட்டியின் வீட்டிற்கு சென்றேன். என்னுடைய அம்மாவின் சித்தப்பா அவர்கள் DEO வாக வேலை செய்து கொண்டிருந்ததால் என்னை செங்கல்பட்டில் இருக்கும் விவேகானந்தாவில் என்னை முதல் வகுப்பில் சேர்த்து விட்டர்கள். அன்று முதல் நான் என்னுடைய வகுப்பிலேயே சிறியவனாக சேர்த்துக்கொள்ளப்பட்டேன். முதல் வகுப்பை முடித்தபின் நான், மதுரைக்கு திரும்பிவந்தேன். நான் என்னுடைய மலரினும் இனிய TVS நகர் வாழ்கையை வாழா ஆரம்பித்தேன். எலேமேண்டரி ஸ்கூலில் நாம் இரண்டாம் வகுப்பில், திருமதி ஜானகி டீச்சர் வகுப்பில் சேர்ந்தேன். எனக்கு தெறித்த வரையில் ஜானகி டீச்சர் மிகவும் சாதுவாகவும், எதிலும் அதிகம் நாட்டம் இல்லாதவர் பூல் இருந்தார். மற்றவர்கள் அவரை பெரிதாக எடுத்க்கொள்லாத போதும் அவர் பெரிதாக அலடிகொள்ளவில்லை.